என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "திருவாரூர் தூர்வாரும் பணி"
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் ஆறு, வாய்க்கால்கள் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு அதிகாரிகளான பள்ளிக் கல்வித்துறை கூடுதல் செயலர் சரவணவேல்ராஜ், கால்நடைபராமரிப்பு துறை இயக்குநர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி சரவணவேல்ராஜ் பேசும்போது கூறியதாவது:-
ஆறு, குளங்கள் பராமரிப்பு பணிகள் மற்றும் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்வதை உறுதி செய்வதற்காகவும் தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் மாவட்ட கணிப்பாய்வு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் வெண்ணாறு வடிநில கோட்டம் மற்றும் காவேரி வடிநில கோட்டத்திற்குட்பட்ட ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொள்ளும் வகையில் இவ்வாய்வுக்கூட்டம் நடைபெறுகிறது.
திருவாரூர் மாவட்டத்தில் காவேரி வடிநில கோட்டம் மூலம் ரூ.62.35 லட்சம் மதிப்பீட்டில் 66.11 கி.மீ தூரத்திற்கு 7 பணிகளும், தஞ்சாவூர் வெண்ணாறு வடிநில கோட்டம் மூலம் ரூ.167.65 லட்சம் மதிப்பீட்டில் 158.86 கி.மீ தூரத்திற்கு 23 பணிகளும்,திருவாரூர் வெண்ணாறு வடிநில கோட்டம் மூலம் ரூ.148.87 லட்சம் மதிப்பீட்டில் 136.75 கி.மீ. தூரத்திற்கு 43 பணிகளும் ஆக மொத்தம் ரூ.378.87 லட்சம் மதிப்பீட்டில் 361.72 கி.மீ. தூரத்திற்கு 73 பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து திருவாரூர் வட்டம் திருக்கண்ணமங்கை பாசன வாய்க்காலில் ஜே.சி.பி இயந்திரம் மூலம் ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 3.5 கி.மீ தூரத்திற்கு வாய்கால் தூர்வாரப்பட்டு வருவதை கணிப்பாய்வு அதிகாரி பார்வையிட்டு தூர்வாரும் பகுதிகளை அளவீடு செய்து சோதனை செய்தார். பின்னர் அன்னவாசல் கிராமத்தில் பாண்டவையாற்றில் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 1.50கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகளையும்,தென்கரை கிராமத்தில் பாசன வாய்க்கால் ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் 2 கி.மீ தூரத்திற்கு தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு பணிகள் குறித்து செயற் பொறியாளரிடம் கேட்டறிந்தார்.
பின்னர் தென்கரை, பூசலாங்குடி, வடகரை ஆகிய கிராமங்களில் பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சக்திமணி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் வேட்டை செல்வன், காவேரி வடிநில கோட்ட செயற் பொறியாளர் அசோகன், மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். #Canaldredging
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்